திமுக பெண் சேர்மன் பேச்சை கேட்காமல் அதிமுக கவுன்சிலர்கள் செய்த சம்பவம்.. பதற்றம்.. பரபரப்பு காட்சி

Update: 2024-12-12 07:59 GMT

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் மாதாந்திர கூட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த 3 வார்டு உறுப்பினர்கள் நகரமன்ற கூட்ட அரங்கு இருக்கையில் அமராமல் தரையில் அமர்ந்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசித்த போது தரையில் அமர்ந்த 3 உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். பின்னர் மைக்கை பிடுங்கி சென்றதால் நகர்மன்ற அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்