சத்தமில்லாமல் கடை ஷட்டரை வெட்டி பணத்தை சுருட்டிய மர்ம நபர்!வெளியான பகீர் வீடியோ! சென்னையில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், ஹார்டுவேர் கடையின் ஷட்டரை வெட்டி, 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக அதன் உரிமையாளர் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதிகாலையில் கேஸ் கட்டரை கொண்டு ஷட்டரை வெட்டி உள்ளே சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர், பணத்தை கொள்ளையடித்ததை கண்டறிந்தனர்.