வீட்டுக்குள் புகுந்து மிரட்டிய திருடன் - பெண்ணுக்கு முத்தமிட்டு ஓடிய சம்பவம்.. என்னவா இருக்கும்?
மகாராஷ்டிராவில் திருட சென்ற வீட்டில், பொருட்கள் கிடைக்காததால், திருடன் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மலாடு பகுதியில் 38 வயது பெண், கடந்த மூன்றாம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டில் நுழைந்த திருடன், கதவை உள்பக்கமாக தாழிட்டு, பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார். திருடனிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என அந்த பெண் புலம்பியதாகவும், இதனால் கோபமடைந்த திருடன், எதிர்பாராத விதமாக அந்த பெண்ணை முத்தமிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில், அன்று மாலையே முத்தமிட்டு தப்பிய திருடனை போலீசார் கைது செய்தனர். திருட சென்ற இடத்தில் பொருட்கள் கிடைக்காததால், பெண்ணிற்கு முத்தமிட்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.