வீடு புகுந்து மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய நபர் - "பாட்டியா கொக்கா".. திருடனுக்கு வைத்த ஆப்பு
சென்னை அடுத்த தாம்பரத்தில் தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்ற மூதாட்டி, அதிகாலை தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர், அவர் காதில் அணிந்திருந்த கவரிங் நகையை, தங்க நகை என நினைத்து பறித்துக் கொண்டு தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நசீம் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்....