லாரி முன்பு திடீரென பாய்ந்த நபர்..ஏறி இறங்கிய சக்கரங்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி காட்சிகள்

Update: 2023-08-29 03:49 GMT

கர ்நாடகாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் தொட்டபல்லாபூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த நபர், திடீரென லாரியில் பாய்ந்தார். அப்போது லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்