"தீபாவளி ராக்கெட் 8வது மாடி போயிருச்சு.. ஒரே திட்டு.." - இஸ்ரோ தலைவர் நாராயணன்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், தீபாவளி ராக்கெட் குறித்த இஸ்ரோ தலைவர் நாராயணின் பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. கடந்த தீபாவளி அன்று ராக்கெட்டை கொளுத்த முயன்றபோது, இது உங்களுக்கு தேவையா என்று அவரது மனைவி கேட்டதாக கூறினார். ஆனால் அதனை மீறியும் கொளுத்திய ராக்கெட் எட்டாவது மாடியில் புகுந்ததால், எஞ்சிய ராக்கெட்டுகளை கொளுத்தாமல் அப்படியே கொடுத்து விட்டதாக கலகலப்பாக பேசினார்.