எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென அறிவிப்பு வெளியானது. இதனால் ராமநாதபுரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு வருகை தந்த பிற மாவட்ட, பிற மாநில மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். தேர்வுகள் ரத்தாகும் என அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால் இதுபோன்று பயணச்செலவு மற்றும் மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம் என மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.