அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை - வெளியான தரவரிசைப் பட்டியல் | Thanthitv
தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கு 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த 5ம் தேதி தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு, மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.