ரசத்தில் நெளிந்த அந்த உயிர்..இதை பார்க்கவே குடலை குமட்டும்..அதிர்ச்சி சம்பவம் | Tamilnadu
திருச்சி திருவெறும்பூர் அருகே பள்ளி விடுதியில் வழங்கப்பட்ட ரசத்தில், புழு இருந்ததால் நள்ளிரவில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டூர் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில், மாணவர்களுக்கு இரவு உணவுக்கு ரசம் பரிமாறப்பட்டுள்ளது. அப்போது, ரசத்தில் புழு மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், விடுதி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, விடுதி காப்பாளரையும், சமையலரையும் இடமாற்றம் செய்து தரமான உணவு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.