இந்தியா கண்ணில் விரல் விட்டு ஆட்டிய சர்வதேச டானின் வலதுகரம்- அவனாகவே சிக்க போட்ட மரண ஸ்கெட்ச்

Update: 2024-11-20 08:03 GMT

சிங்கம் படம் பாணியில், நைஜீரியாவைச் சேர்ந்த Wholesale drugs dealer-ஐ தமிழ்நாட்டு போலீசார், மாநிலம் விட்டு மாநிலம் போய் பொறிவைத்து தட்டித் தூக்கியிருக்கிறார்கள்.. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்..விரிவாக...

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இந்த ஆக்‌ஷன் அரங்கேறியுள்ளது.. தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட ட்ரக்ஸ்களை மொத்தமாக டெலிவரி செய்து வந்த முக்கியமான குற்றவாளியை சென்னை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்ததுதான், அங்கு பேசுபொருளாகி இருக்கிறது..

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை விற்று வந்தவர்களை அரும்பாக்கம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த அபித் என்பவர் உள்பட ஜீவன், மஸ்தான், ஜெகதீசன் என 11 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

ஆறு நாட்களாக போலீஸ் கஸ்டடியில் இவர்களிடம் நடத்திய விசாரணையில், நைஜீரியாவைச் சேர்ந்த ட்ரக்ஸ் டீலரிடம் இருந்து மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாங்கி சென்னை மாநகரில் விற்று வந்தது அம்பலமாகியுள்ளது..

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்காக தங்களிடம் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அந்த நபர் வாட்ஸ் அப் மூலம் பேசுவதாகவும், அவர் எப்போதும் பெங்களூருவில் ஏதாவது ஒரு ரகசிய இடத்தில் மட்டும் எங்களை வரவழைத்து, ட்ரக்ஸ்களைக் கொடுக்க வருவார் எனவும் அவரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவோம் எனவும் கூறியிருக்கிறார்கள்...

இதைத்தொடர்ந்து, நைஜீரியாவில் இருந்த அந்த நபரைப் பிடிக்க திட்டமிட்ட சென்னை போலீசார், அந்த நாட்டில் இருந்து அவராகவே வந்து சிக்கிக் கொள்ளும்படி திட்டம் தீட்டியிருக்கிறார்கள்..

அதன்படியே, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞரை வரவைக்க வேண்டும் என்பதற்காக... மீண்டும் ட்ரக்ஸ் வேண்டும் என ரகசிய பாஸ்கோர்டுகளைக் கூறி, வாட்ஸ் அப் மூலம் சென்னை போலீசார் அவர்களைப் பேச வைத்திருக்கிறார்கள்..

பிறகு, அவனது கூட்டாளிகளும் இந்த முறை பல்க்காக... பெரிய ஆர்டருக்கு மெத்தபெட்டமைன் தேவைப்படுவதாக கூறவே, நைஜீரியாவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவிற்கு ட்ரக்ஸை அள்ளிக் கொண்டு சேல்ஸ் செய்வதற்காக வந்திருக்கிறார்,.. அந்த நைஜீரியன் ட்ரக்ஸ் டீலர்..

இதை அடுத்து, பெங்களூருவில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து இறங்கி.. திட்டமிட்டபடி பொறியில் சிக்கிக்கொண்ட நைஜீரியன் ட்ரக்ஸ் டீலரை, அங்கு மாறுவேடத்தில் ரகசியமாக பதுங்கியிருந்த சென்னை அண்ணாநகர் தனிப்படை போலீசார்.. சடனாக சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள்..

யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நைஜீரியன் டிலரை, பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வந்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நைஜீரியன் ட்ரக்ஸ் டீலர் 31 வயதான பிலிப் என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், அவர் இந்தியாவிற்குள் வந்து செல்வதற்கான பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் உயர் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதேபோல, இவருடன் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்