மளிகை கடையில் எஸ்.ஐ செய்த காரியம்... வைரலாகும் வீடியோ

Update: 2024-12-09 06:12 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஜெகதீஷ் மனைவி முத்துச்செல்வி கடை நடத்தி வருகிறார். அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் என்பவர் சிகரெட், தீப்பெட்டி என மொத்தம் ரூபாய்170 -க்கு பொருட்கள் வாங்கி உள்ளார். ஆனால் ரூபாய் 69 மட்டும் பேடிஎம் இல் செலுத்திவிட்டு மீதி பணத்தை தர மறுத்துள்ளார். இதனை கேட்ட முத்துலட்சுமிக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்தபடி வாக்குவாதம் செய்தநிலையில், அங்கு நின்ற உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றார். இந்நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்துச்செல்வி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். தற்போது, காவல் உதவி ஆய்வாளருடன் முத்துலட்சுமி வாக்குவாதம் செய்த சம்பவம் வைரலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்