சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியி, 600 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 6 புள்ளி 68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.