வீட்டிலிருந்து வந்த கெட்ட வாடை... உள்ளே நுழைந்த உறவினர்களுக்கு காத்திருந்த ஷாக் - அண்ணனே தங்கையை..!

Update: 2024-11-07 08:44 GMT

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆச்சியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். கணவர் பிரிந்து சென்று விட்டதால் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆச்சியம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த ஆச்சியம்மாளின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் ஆச்சியம்மாளின் வயதான அண்ணன் பெருமாள் பிள்ளையைப் பிடித்து விசாரித்தனர்.அதில் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.மேலும் ஆச்சியம்மாளிடம் வாங்கிய பணத்தை பெருமாள்பிள்ளை திருப்பி கொடுக்காததால் அது தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் பிள்ளை ஆச்சியம்மாளை கட்டையால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பெருமாள் பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.பெருமாள் பிள்ளையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்தும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்