இரவிலும் விடாமல் செம்ம காட்டு - குளமாக மாறிய சாலைகள் - வெளியான பரபரப்பு காட்சிகள்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் இரவு எட்டு மணிக்கு மேல் படிப்படியாக மழை பெய்து அதிகரித்து, கனமழையாக மாறி பெய்தது. தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், பரசலூர், இலுப்பூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.