``8 பேர் சேந்து அடிச்சே சாகடிச்சுருக்காங்க''..காவலுக்கு சென்ற இடத்தில் கணவனுக்கு நேர்ந்த சோகம்..

Update: 2024-12-31 06:16 GMT

அரகண்டநல்லூரை அடுத்த நாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், பொங்கலுக்கான பனி கரும்பை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் கரும்புகள் திருடுபோவதால், வயலில் பாதுகாப்புப் பணிக்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில், வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் கரும்பை திருட வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை அப்புறப்படுத்த முயன்ற மணிகண்டனை, போதை இளைஞர்கள் தாக்கியதாக தெரிகிறது. மயங்கி விழுந்த மணிகண்டனை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த‌தோடு, 2 இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அதே நேரத்தில், மணிகண்டன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த‌தால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்த‌தை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்