ஆசை காட்டி அரசு பஸ் டிரைவர் செய்த மோசடி.. கொத்தாக தூக்கிய போலீஸ்

Update: 2024-11-19 02:38 GMT

நாமக்கலைச் சேர்ந்த நந்தினி என்ற பூ வியாபரியிடம்,பாலமுருகன் என்ற அரசு பஸ் டிரைவர், சேலத்தை சேர்ந்த பாபுஜிக்கு ஆஸ்திரேலியாவில் உலோகம் விற்ற பணம், 90 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதாக கூறியிருந்தார். ணக்கு காட்டுவதற்காக, வங்கி கணக்கு மூலம், ஒரு நபர், ஒரு டோக்கனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டினால், அவர்களது வங்கி கணக்கில், ஒரு கோடி ரூபாய் வரும். அதில், ஐம்பது லட்சம் ரூபாயை, பாபுஜிக்கு கொடுத்துவிட வேண்டும் என்று ஆசை காட்டினார். அவரது பேச்சை நம்பிய நந்தினி, கடந்த மாதம் மூன்று நான்கு தவணைகளாக மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஜி பே மூலமும், ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். இதற்கிடையில், டிரைவர் பாலமுருகன் இதே போல் பலரிடம் ஆசை வார்த்தை கூறி கோடி கணக்கில் பண மோசடி செய்தது தெரிய வந்ததும், நந்தினி, நாமக்கல் போலீசாரிடம் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்