கொடூர வறுமை.. குடும்பம் பாரத்தை குறைக்க... களத்தில் இறங்கிய கடைக்குட்டி - கடைசியில் நேர்ந்த சம்பவம்

Update: 2024-11-10 13:14 GMT

கன்னியாகுமரி மாவட்டம் விரிவிளை அருகே, வேலைக்கு செல்வதாக கூறி சென்ற 18 வயது சிறுவன் இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர்.

ராஜகுமாரி என்பவர், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் விரிவிளை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னைக்கு வேலைக்கு சென்ற நிலையில், குடும்ப வறுமையால் இளைய மகன் விஷ்ணு, பைங்குளம் பகுதியில் கடையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகனை காணவில்லை என, நித்திரவிளை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்