கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா? இந்த சேதி உங்களுக்கு தான் | Thanthitv
கொடைக்கானல் நுழைவு வாயில் சோதனைச் சாவடியில், 5 லிட்டருக்கும் குறைவான வாட்டர் பாட்டில் பரிசோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. மலை வாசஸ்தலங்களுக்குள் 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதுபோன்ற பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தண்ணீர் பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக 20 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்களுடன், சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.