டங்ஸ்டன் விவகாரம்..ஒரே குண்டாக தூக்கி போட்ட அன்புமணி..பரபரப்பு பேச்சு | Anbumani | Madurai
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை ரத்து செய்ய அரிட்டாபட்டி, வல்லாளபட்டி கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களை நேரடியாக சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு எங்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு செய்தது தவறு என கண்டிப்பதாக குறிப்பிட்ட அவர், அரிட்டாபட்டியை பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் அறிவித்து சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.