`மதுரை ஜல்லிக்கட்டு' - மருத்துவமனையில் சிறப்பு வார்டு

Update: 2025-01-10 05:56 GMT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. காளைகள் முட்டுவதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காயம் அடைய வாய்ப்பிருக்கிறது. எனவே, துரிதமாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக அறுவைச் சிகிச்சை வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்