வானிலை ஆய்வு மையம் - கொடுத்த அபாய அலெர்ட் - மக்களே உஷார்

Update: 2024-04-10 08:59 GMT

தமிழகத்தின் பல பகுதிகளில், திங்கள் அன்று 40 டிகிரி சென்டிகிரேடிற்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இயல்பு நிலையை விட 2 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரை அதிக வெப்பம் பல பகுதிகளில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூர், பரமத்தி, தர்மபுரி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதீத வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று வீசுவதில் தொடர்ச்சியற்ற தன்மை, சூறாவளி சுழற்சி ஆகியவற்றின் காரணமாக வடக்கு தமிழகத்தில் வெப்ப அலைகள் வீசும் என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் பணியாற்றுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்