யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு - மாஸ்டர் பிளானோடு களமிறங்கிய திமுக
யுஜிசியின் புதிய வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்போம்........
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் கல்வி உரிமையையும், சமூக நீதியையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக மாணவர் அணிச் செயலாலர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், இந்திய மாணவர் சங்கம், திராவிட மாணவர் கழகம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முஸ்லிம் மாணவர் அமைப்பு, சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.