களைகட்டும் தீபாவளி விற்பனை... அலைமோதும் மக்கள் கூட்டம்

Update: 2024-10-30 12:22 GMT

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் இன்று திருப்பூர் புது மார்க்கெட் வீதி குமரன் சாலை என கடைவீதிகளில் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் பொருட்கள் வாங்க வெளியே வந்ததால் திருப்பூர் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரை கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த சாலையைக் கடப்பதற்கு அரை மணி நேரம் வரையிலும் தாமதமாகிறது. மேலும் வழக்கத்தை காட்டிலும் கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதை கணித்த திருப்பூர் மாநகர காவல் துறையினர் புது மார்க்கெட் வீதி குமரன் சாலை புஷ்பா சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலில் திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்