வாட்ஸப் வீடியோ காலில் வந்த `CBI' - திடுக்கிட வைத்த நடிகையின் கணவர் பெயர் - அடுத்து அரங்கேறிய சம்பவம்

Update: 2024-10-30 16:52 GMT

வாட்ஸப் வீடியோ காலில் வந்த `CBI' - திடுக்கிட வைத்த நடிகையின் கணவர் பெயர் - அடுத்து அரங்கேறிய சம்பவம்

சென்னை, அம்பத்துாரை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரை வாட்ஸப் வீடியோ காலில் ஆகஸ்ட் மாதத்தில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். நாங்கள் சி.பி.ஐ.யில் இருந்து பேசுகிறோம் என்றும், ராஜ் குந்த்ரா பண மோசடி வழக்கில் உங்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் கூறினர். உங்களுக்கு எதிராக நீதி மன்ற பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டு உள்ளது

எனவும், 7 ஆண்டுகள் வரை சிறை செல்ல வேண்டி வரும் எனக்கூறி மிரட்டியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17இல், ரமேஷ் பாபுவிடமிருந்து நான்கு தவணைகளில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாயை பெற்று, இணைப்பை துண்டித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் பாபு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் வேளச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பரின் நிறுவனதின் வங்கி கணக்கை, வட மாநில மோசடி கும்பலிடம் கொடுத்து அவர்கள் வாயிலாக ரமேஷ் பாபுவை ஏமாற்றியது தெரிய வந்தது. சதீஷ்குமாரை கைது செய்து,

பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்