சென்னையில் சுரங்கத்தில் சிக்கிய மினி பேருந்து - உள்ளே இருந்த பயணிகள் நிலை?
சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது. இதனால் அவ்வழியாகச் சென்ற மாநகர மினி பேருந்து ஒன்று, மழை நீரில் சிக்கிக் கொண்டதால் பயணிகள் பரிதவித்தனர். அதன் பிறகு பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி, மழைநீரில் நடந்து சென்று, சுரங்கப்பாதையில் இருந்து வெளியே சென்றனர். மேலும், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால், வாகன ஓட்டிகள், மாற்றுப் பாதையில் சுற்றிச் சென்றனர்.