குழந்தை பருவத்தை அனுபவித்த போதே உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

Update: 2024-12-08 04:26 GMT

குழந்தை பருவத்தை அனுபவித்த போதே உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள புளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரூபன் குமார். இவரது ஐந்து வயது மகன் கிஷோர், வழக்கம் போல வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக கட்டப்பட்ட எதிர்வீட்டின் கழிவு நீர் தொட்டியில் மழை நீர் தேங்கி இருந்தது. சிறுவன் கிஷோர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு அந்த கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிதுள்ளான். சிறுவன் மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கிஷோர் புளியனூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்