மோதிய வேகத்தில் சல்லி சல்லியாக நொறுங்கிய பைக்..சென்னையே அலற கேட்ட சத்தம்..துடிதுடித்து பிரிந்த உயிர்

Update: 2024-12-08 05:02 GMT

திருச்சியைச் சேர்ந்த மாணவர் மேத்யூ, சென்னை அரும்பாக்கம் பகுதியில் அறை எடுத்து தங்கி, வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு மேத்யூ நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, அதிகாலையில் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு அருகே சத்யா ஸ்டூடியோ பகுதியில் சென்றபோது, வேகத்தடையால் கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகே இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த மேத்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மேத்யூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்