கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், இன்று யார் அந்த சார் பேட்ஜ் (badge) உடன் வெள்ளை சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளார். கருப்பு சட்டை அணிந்து வந்தால் ஈ.பி.எஸ் பேசுவதை நேரலையில் காட்டாமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால் வெள்ளை சட்டை அணிந்து வந்ததாக அதிமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.