உதகையில் தொடங்கியுள்ள சர்வதேச குறும்பட விழாவில் 100 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 45 நாடுகளை சேர்ந்த சிறந்த 100 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் சிறந்த குறும்படங்கள், மே மாதம் ஜெர்மனியில் நடக்கும் குறும்பட விழாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 7 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படும். இந்த குறும்படங்களை காண கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.