இயற்கை உபாதை கழிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கதி - சென்னை அருகே அதிர்ச்சி

Update: 2025-01-11 09:50 GMT

கும்மிடிப்பூண்டி அருகே வயல்வெளியில் மின்சாரம் பாய்ந்ததில், தனியார் தொழிற்சாலை ஊழியர் ஜோதி என்பவர் உயிரிழந்தார். மேலும், அவரது நண்பர் எலக்டீரிசியன் சுரேஷ் என்பவர் 75% தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, கீழே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் வயரை 2 பேரும் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்