நெல்லை அரசு மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

Update: 2025-01-11 09:22 GMT

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து ஆட்டம் பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகமாக கொண்டாடினர்.


தமிழர் திருநாளான தைத்திருநாள் வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கல்லூரிகள், பள்ளிகளில் சமத்துவப் பொங்கலிட்டு மாணவ -மாணவிகள் கொண்டாடுவது வழக்கம் அதன்படி நெல்லை பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காகக் கல்லூரி முழுவதும் கரும்பு மஞ்சள் தோரணங்கள் கட்டி வண்ணக் கோலமிட்டு சிறப்பான வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கல்லூரியில் செயல்படும் 14 துறைகள் சார்பில் 28 புதுப்பானைகள் வைக்கப்பட்டு புத்தரிசியிட்டு இயற்கை விளைபொருட்களை படைத்து மாணவிகள் பேராசிரியர்கள் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலிட்டனர். மேலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாணவிகள் சேலை மற்றும் தாவணி அணிந்து பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்தப் பொங்கல் திருவிழாவால் கல்லூரி வளாகம் முழுவதும் களைகட்டியிருந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்