அரிசிக் கடை ஓனர் கடத்தல் - தென்காசி டூ பெரம்பலூர்... அதிர வைத்த சேசிங் - வெளியான ட்விஸ்ட் பின்னணி
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள வெங்கடாம்பட்டியில் உதயகுமார் என்பவர் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற வியாபாரியிடம் இருந்து ரூ 98 லட்சத்துக்கு நெல்லை கொள்முதல் செய்து இருக்கிறார். அதற்காக ரூ 77 லட்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள ரூ 21 லட்சத்தைக் கொடுக்காமல் உதயகுமார் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூரியகுமார் அடி ஆட்களுடன் வந்து உதயகுமாரை காரில் கடத்தி சென்று இருக்கிறார். இது தொடர்பாக உதயகுமாரின் தந்தை கடையம் போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாகக் களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார் பெரம்பலூரில் வைத்துக் கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்து உதயகுமாரை மீட்டுள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட நெல் வியாபார சூர்யகுமார் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.அரிசி ஆலை உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.