தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், திருவாதிரை திருவிழாவையொட்டி நடராஜ பெருமாள் செப்புரச் சப்பரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் கோ பூஜையுடன் நடைபெற்றதைத் தொடர்ந்து நடராஜ பெருமான் செப்பு சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..