மலையில் இருந்து தவறி விழுந்து பலியான இளைஞர் - 2 நாட்களுக்கு பின் கிடைத்த உடல்
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், கடந்த 9-ம் தேதி கோவில் திருவிழாவிற்கு பந்தல் அலங்காரம் செய்வதற்காக ஊர் மக்களுடன் சேர்ந்து குரங்கு பாறைக்கு சென்றுள்ளார். அப்போது கரடிக்கிடை பகுதியில் இருந்த முருகேசன், சுமார் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த முருகேசனை உடன்வந்தோர் மீட்க முயற்சித்த நிலையில், இரவு நேரமானதால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிக்கு சென்ற வனத்துறையினருக்கு வழிகாட்ட சென்றவர்கள் திசை மாறிய நிலையில், இரண்டு நாள் தேடுதலுக்கு பின் முருகேசனின் உடல் மீட்கப்பட்டது.