தஞ்சையை உலுக்கிய சம்பவம்.. கண்ணை மறைத்த விரோதம்...வெறியில் கொலை செய்த மொத்த குடும்பம்
பூதலூர் அருகே மேகளத்தூர் கிராமத்தில் வசிக்கும் கேசவன் என்பவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதே தெருவில், குணசேகரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரு குடும்பத்திற்கும், ஆடு, மாடு, கோழி மேயும்போது தொடங்கிய வாய்த்தகராறு நாளடைவில் முன்விரோதமாக மாறியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கேசவனின் மகள் காவியா, ஊருக்கு பொதுவான குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அங்கு வந்த குணசேகரனின் மனைவி செல்லபாப்பா, கேசவனின் மகளிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருகுடும்பத்தாரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், குணசேகரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கட்டை மற்றும் இரும்புக்கம்பியால் கேசவன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த கேசவன், மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக
கேசவனின் மனைவி அனுஷா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குணசேகரன், அவரது மனைவி செல்லபாப்பா, மகள் மற்றும் மகன்கள் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.