#JUSTIN || அரசு பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு நடுரோட்டில் போட்டு வெறி தீர வெட்டிய கும்பல்... ரிலீஸான ஒரே வாரம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த நபர் | Trichy
பட்டப் பகலில் அரசு பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளிவிட்டு சாராமாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பல் - பழிக்கு பலியாக ஒரு வருடம் கழித்து நடந்த கொலை சம்பவம் - கைரேகை நிபுணர் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
திருச்சி மாவட்டம் ஜியபுரம் அடுத்து கொடியாலம் மாரியம்மன் கோவில் வசிப்பவர் கணபதி இவரது மகன் விஷ்ணு ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று விஷ்ணு கொடியாலத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றது.
கொடியாலம் அடுத்து திண்டுக்கரை ரயில்வேகேட் அருகே பேருந்து சென்றபோது விஷ்ணு பேருந்தின் பின்பக்கம் படிகட்டின் அருகே நின்றுள்ளார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலில் ஒருவர் பேருந்தில் ஏரி விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் சாரா மாறியாக விஷ்ணுவின் முகம், தலைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் விஷ்ணு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் அரசு பேருந்து பகுதியில் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காலை 9 மணி பட்டப் பகலில் அரசு பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாராமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கொடியாலம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அந்தப் பெண் விஷ்ணுவின் உறவினர் என்பதால் விஷ்ணு கண்டித்தும் மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கோகுலை கொலை செய்து உள்ளான். கோகுல் கொலை நடந்து கடந்த வாரம் தான் ஒரு வருடம் ஆகியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த விஷ்ணுவை பழிக்கு பலியாக தற்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.