ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் ஒரு ஆசிரியர்கள் இருப்பார்கள்.. அவர்கள் நம்மை உயர்த்தி இருப்பார்கள். உத்வேகப்படுத்தி இருப்பார்கள்..
இந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கணேசனின் ஆசிரியர் பணியும், அவரின் உன்னதமான சமூகப் பணியும் மக்களை நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது...
கணேசன், ஆசிரியர்
"மிகவும் கடினமான சூழலில்தான் நான் படித்தேன்"
"அரசு பள்ளியில் உதவி தலைமையாசிரியராக இருக்கிறேன்"
"ஊதியத்தில் 20 சதவீதத்தை மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கிவிட்டேன்"
வறுமையில் வாடும் மாணவர்களுக்கு கல்வி என்னும் பேராயுதத்தை கணேசன் கொடுக்கும் இந்த முயற்சியில், அவரின் முன்னாள் மாணவர்களும், அவரின் நண்பர்களும் இணைந்திருக்கின்றனர்...
கணேசன், ஆசிரியர்
"நான் மட்டும் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவவில்லை"
"என் முன்னாள் மாணவர்களும், என்னுடன் படித்தவர்களும் உதவுகிறார்கள்"
"சுமார் 23 ஆண்டுகளாக உதவி வருகிறோம்"
கல்வி மூலம் 23 ஆண்டுகளாக பல தலைமுறைகளை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் இந்த மகத்தான பணியில் பெண் பிள்ளைகளுக்குதான் முன்னுரிமை என்கிறார் அவர்..
கணேசனின் இந்த பணி, மாணவர்களிடம் கல்வியை சேர்ப்பதோடு மட்டுமில்லாமல்... மாணவர்களின் தனித்திறைமையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது..
இதற்கு சான்றுதான் இந்த மாற்றுத்திறனாளி குழந்தை...
கனிஸ்வரி, ஊத்தங்கரை
"எனக்கு பாட பிடிக்கும், நன்றாக பாடுவேன்"
"என்னை தொடர்ந்து பாட வைத்து உத்வேகப்டுத்துவார் ஆசிரியர்..."
"என் கல்விச் செலவுகளுக்கும் கணேசன் ஆசிரியர்தான் உதவுகிறார்"
இதோடு இல்லாமல், உண்ண உணவு, உடுத்த உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சிரமப்படும் பலருக்கும் கணேசனின் சமூக பணி நீள்கிறது..
"வறுமையில் வாடும் மக்களுக்கும் உதவுவார்"
"கஷ்டப்படுபவர்களை அடையாளம் காட்டினால் போதும்.. ஓடோடி வந்துவிடுவார்"
சுயதொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு திருமண சீர்வரிசை, அவர்களுக்கான மருத்துவச் செலவு என கணேசனின் சமூகப்பணி பலரை நெகிழ வைக்கிறது..
தொடர்ந்து, மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், மகாத்மா காந்தி, திருவள்ளுவர், பாரதியார், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் வேடமணிந்து வகுப்பறைகளுக்கு செல்வதும் ஆசிரியர் கணேசனின் வாடிக்கையாம்... சமூக மாற்றத்திற்கு இவரைப் போன்றவர்கள் தான் இன்றைய தேவையும் கூட..