நாட்டில் குரங்கம்மை நோய் ஏற்படுவதை தடுக்கவும்,
நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. மாவட்டங்களில் மூத்த அதிகாரிகளால் சுகாதார ஆயத்த நிலை குறித்து மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. குரங்கம்மை நோயாளிகளை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் இதற்கு தேவையான தளவாடங்களின் இருப்பு, பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவர்களின் இருப்பு, தொடக்கத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.