திடீரென மருந்துகளின் விலையை குறைத்த - மத்திய அரசு

Update: 2024-05-17 02:26 GMT

அத்தியாவசிய மருந்துகள், மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 143 வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆறு மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. விலை குறைப்பு குறித்த தகவல்களை டீலர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தெரிவிக்க மருந்து நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் விலை குறைவதன் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்