மதம் மாறிய தமிழ் பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு - சொன்ன கருத்து தான் ஹைலைட்

Update: 2024-11-28 05:12 GMT

நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர்,, தனது தந்தை இந்து என்றும் தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ​​ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தை உட்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து பட்டியலின சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ மறுத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர் சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளதால், சலுகையை பெறுவதற்கான சான்றிதழை கோரியதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து செல்வராணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்