"என் மகன் திரும்பி வரவில்லை" தூய்மை பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - கதறும் உறவினர்கள்

Update: 2024-11-17 12:10 GMT

ராமேஸ்வரம் ரயில் நிலைய பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் பாதைகளை சுத்தம் செய்த தனியார் ஒப்பந்த ஊழியர் பாலு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் பாதையை தூய்மைப்படுத்திய போது மயங்கி விழுந்த பாலுவை அங்கிருந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாலு உயிரிழந்த செய்தியை கேட்டு உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. விஷ வாயு தாக்கி பாலு உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், அவரது குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்