மதுவிற்கு அடிமையான கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு.. ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர்கள் முன்வராததால் பறிபோன உயிர்...காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்

Update: 2024-11-17 12:29 GMT

இந்த பெண்ணை உயிருக்கு ஆபத்தான நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது..

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் அருண்குமார். இவரது மனைவி சிவரங்கனி. 32 வயதே ஆன சிவரங்சனி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள சுகாதார நிலையத்தில் அரசு செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்..

இந்த சூழலில் தான், சிவ ரங்கனியின் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது..

இப்படியாக, நாளுக்கு நாள் கணவர் செய்து வந்த கொடுமைகளை எல்லாம், தாங்க முடியாமல் சிவ ரங்கனி 50-க்கும் மேற்பட்ட பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகிறது..

இதை அறிந்த குடும்பத்தினர், சிவ ரங்கனியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.

மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்த நிலையில், செவிலியர் சிவ ரங்கனியின் குடும்பத்தினர், அவசரம் அவசரமாக ஆம்புலன்ஸ் டிரைவர் எங்கே? எனத் தேடியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், அங்கு ஆம்புலன்ஸ்க்கு டிரைவர்களே இல்லை என்ற செய்தி அவர்களது தலையில் பேரிடியாக விழுந்திருக்கிறது..

இதனால், செவிலியர் சிவ ரங்கனியைக் கொண்டு செல்ல முடியாமல், அவரது குடும்பத்தினர் தலையில் கையை வைத்த படி, செய்வதறியாமல் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பியுள்ளனர்..

இதற்கு நடுவே,... அங்கு 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, செவிலியர் சிவ ரங்கனியின் உயிரும் துடி துடிக்கப் பிரிந்தது..

ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்ததால் தான், இப்படி செவிலியர் சிவ ரங்கனியின் உயிர்ப் போனதாக கூறி, அவரது உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்