நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவிய தர்ஷினி என்பவர் பி.பார்ம் படிப்பதற்காக, மூன்று தினங்களுக்கு முனபாக சேர்ந்ததாக கூறப்படுகிறது. கல்லூரியில் சேர்ந்து மூன்று தினங்களே ஆன நிலையில், அவர் கல்லூரியின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சேலம் சரக டிஐஜி உமா மற்றும் திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரித்தனர்,