அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தலைமைச்செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம், நெடுஞ்சாலைத்துறை நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வரும் 30ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.