சொத்துக்காக பெற்ற தந்தையை காட்டுக்குள் வைத்து மகன்கள் செய்த காரியம் -மனதை உலுக்கும் காட்சி
பொள்ளாச்சியில், சொத்துக்காக பெற்ற தந்தையையே மகன்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருக்கு சுப்பிரமணியம், சிவக்குமார் என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சொத்துக்காக முதியவர் குப்புசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க சென்ற உறவினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.