1000 பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ1882கோடி மதிப்பில் தரவு மையத்தை திறந்துவைத்தார் முதல்வர்
செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் சிஃபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள தரவு மையம் திறக்கப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார்.
மேலும், கிழக்குக் கடற்கரை சாலையில் இந்நிறுவனம் அமைக்கவுள்ள ஒரு திறந்தவெளி கேபிள் லேண்டிங் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழவிலும் கலந்து தொழிலாளர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார்.