"கம்ப்யூட்டர் படிச்சா எங்க வேலைக்கு போகணும்?" ஆட்சியர் கேட்ட கேள்விக்கு தடுமாறிய விவசாயி
நாமக்கல்லில் சிப்காட் திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் உமா காரசாரமாக பேசினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிப்காட் திட்டம் வேண்டாம் என விவசாயிகள் பேசிய நிலையில், திட்டத்திற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஆட்சியர் உமா விளக்கம் அளித்தார்.