Thiruvarur News | உயிரோடு மண்ணில் புதைந்த தொழிலாளி.. மீட்க போராடிய திக் திக் காட்சிகள்
திருத்துறைப்பூண்டி அருகே பாலக்கட்டுமானப் பணியின் போது, ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக்கொண்ட தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வளயக்கார தெரு வாய்க்கால் பகுதியில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் 5 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து கட்டுமான பணியில் ஈடுபட்ட சீதாராமன் என்ற தொழிலாளி மண் சரிவில் சிக்கிய நிலையில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தொழிலாளியை பத்திரமாக மீட்டனர்.