வேலூரில் த.வெ.க பேனரை அகற்ற வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் த.வெ.க தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பேனர் வைத்ததாக மாநகராட்சி ஊழியர்கள் பேனரை அகற்ற வந்தபோது த.வெ.க தொண்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேனர் அகற்றப்படும் என த.வெ.கவினர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.