தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளும் அவர் வழங்கினார். தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.